சென்ற இதழ் தொடர்ச்சி...
28-3-2018 அன்று பகல் 12.47 மணிக்கு புதன்கிழமை ராகு காலத்தில் என்னை சந்தித் தார். தன் மகளின் ஜாதகத்தைக் கொடுத்து, ""என் பெண்ணைப் பற்றி உறவினர் கூறும் தகவல் உண்மையா?'' என்று கேட்டார். ""உண்மை. உங்கள் பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டது''’ என்று கூறினேன். ‘""என் பெண் வீட்டில்தான் இருக்கிறாள். இதை எப்படி நான் நம்புவது?'' என்று அப்பாவியாகக் கேட்டார். அந்தப் பெண்ணிற்குத் திருமணம் நடந்துவிட்டது என்று கூறியதற்கான காரணங்கள்.
ஒரு சம்பவம் நடந்ததா? நடக்கவில்லையா என்பதை கோட்சார சந்திரனையும், ஆருடத்தையும் வைத்து தெளிவாக முடிவுசெய்ய முடியும்.
1. ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் 1.37 டிகிரி. ஜனன சந்திரன் 17.55 டிகிரி. இவையிரண்டுக்கும் நடுவில் செவ்வாய் 6.52 டிகிரி. செவ்வாய் இந்த ஜாதகிக்கு 7-ஆம் அதிபதி. செவ்வாய் என்பது பெண் ஜாதகத்தில் கணவரையும் குறிக்கும். ஒருவரின் ஒழுக்கத்தைக் குறிக்கக்கூடிய 4-ஆம் வீட்டில் கோட்சார சந்திரன் ஜனன செவ்வாயுடன் ஐந்து டிகிரி வித்தியாசத்தில் இருப்பதால், சம்பவம் உண்மை என்பதை நிர்ணயம் செய்த முதல் ஆதாரம் இதுவே.
2. ஜாதகர் என்னைப் பார்க்க வந்த நேரம் பகல் 12.47 மணி. உதய லக்னம் மிதுனம்; கடிகார ஆருடம் மகரம். ஜனன ஜாதகத்திலுள்ள புதன், சூரியன்; கோட்சாரத்தில் கேதுவின்மேல் ஆருடம். ஜனன புதனும், கோட்சார கேதுவும் பெண்ணின் காதல் உண்மை என்பதை நிரூபித்த 2-ஆவது ஆதாரமாகும்.
3. நடப்பில் சந்திர தசை, குருபுக்தி. சந்தி ரனின் சாரநாதன் சுக்கிரன். குருவின் சார நாதன் சனி. இயங்கும் பாவகங்கள் 1, 3, 4, 6, 7, 8, 9, 10. தசையிலும் புக்தியிலும் 7-ஆம் பாவகம் வலிமையாக இயங்குகிறது. 7-ஆம் பாவகம் வலிமையாக இயங்கும்போது மட்டுமே திருமணம் நடைபெறும். 2, 7-ஆம் பாவகங்கள் இயங்கியிருந்தால் காதலோடு நின்றிருக்கும். 7-ஆம் பாவகம் மட்டும் வலிமையாக இயங்கியதால் திருமணத்தில் முடிந்தது. புக்திநாதன் குரு நின்ற இடம் 7-ஆம் பாவகம்.
7-ல் நின்ற களத்திரகாரகன் சுக்கிரனுக்கு திரிகோணத்தில் நின்ற கோட்சார ராகு. களத் திரகாரகன், புக்திநாதன் குருவுக்கு திரிகோணத்தில் நின்ற ராகுவே கலப்புத் திருமணத்தை நடத்திவைத்த கர்ம அதிகாரி. ஜனன ஜாதகத்தில் 4-ஆமிடத்தில் செவ் வாய்க்கு திரிகோணத்தில் நிற்கும் கோட்சார சனியே இந்தப் பெண்ணைத் திருமணம்செய்ய வைத்தது. ஒருவரை நிலைகுலைய வைக்கும் சம்பவம் நடக்கிறதென்றால், அதற்குப்பின் நிச்சயம் சனி, ராகு- கேது இருப்பார்கள். கர்ம வினையை செயல்படுத்தும் கர்மவினை அதிகாரிகள் சனி, ராகு- கேதுக்கள்.
"பின்னர், பெண்ணின் தந்தை, ""இந்த சம்பவம் எப்பொழுது வெளியே தெரியும்'' என்று கேட்டார்.
9-ல் சூரியன் காரகோ பாவகநாஸ்தி. 9-ல் உள்ள சூரியனை கோட்சார கேது தொடும் காலமே வெளியில் தெரியும் காலம். ஜாதகம் பார்த்த நாளில் கோட்சார கேதுவின் டிகிரி 18.42. சூரியனின் டிகிரி 6.03. கேதுவுக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 11. 39 டிகிரி வித்தியாசம். கேது ஒரு மாதத்திற்கு தோராய மாக ஒன்றேகால் டிகிரி கடக்குமென்றால், சூரியனைத் தொடும்போது செப்டம்பர் மாதமாகும். ""ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் உங்களுக்குத் தெரியவரும்'' என்றேன்.
அந்த ஜாதகர் 20-10-2018 ஞாயிறு அன்று மாலை ராகு காலமான 5.03 மணிக்கு போன்செய்து, ""நீங்கள் கூறிய எல்லாமே உண்மை. என் பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அவள் வீட்டிலிருந்து கணவனுடன் சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது'' என்றார். மேலும், ""என் பெண்ணுக்கு செவ் வாய் தோஷம் உள்ளது. அந்தப் பையனுக்கு செவ்வாய் தோஷமில்லை. அதனால் என் மகள் போன இடத்தில் இருப் பாளா? திரும்பிவந்துவிடு வாளா'' என்று கேட்டார்.
திருமணம் நடைபெறும் முன்பே அதுபற்றி பலமுறை ஜனனகால நிலைமையைச் சொல்லியும், தன் மகள் மீது கொண்ட அதீத நம்பிக்கையால் பெண்ணைக் கண்டித்துக் கேட்கவில்லை. பெற்றோர்களின் நம்பிக் கையைக் காப்பாற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமை. பிள்ளைகளை மட்டும் தவறாகக் கூறமுடியாது. சில பிள்ளை களின் ஜனன ஜாதகத்தில் தவறான நட்பிற்கான கிரகச் சேர்க்கை இருக்கும். ஆனால், கோட்சாரமும் தசாபுக்தியும் சாதகமாக இல்லாதபோது சம்பவம் நடக்காது. ஜனனகால ஜாதக அமைப்பை வைத்துக்கொண்டு, 24 மணி நேரமும் பிள்ளையின் செயல்களைக் கண்காணித்து, இம்சைசெய்து, மனதை நோகடித்து தவறான பாதையில் ஈடுபட வைத்துவிடுகிறார்கள்.
காதல் திருமணத்தில் எண்பது சதவிகிதம் தோல்வியில் முடிகிறது. இதில் பத்து சதவிகிதம் பேர் உண்மையாக வாழ்பவர்கள். மீதமுள்ள பத்து சதவிகிதம் பேர் தோல் வியை வெளிக்காட்டாமல் நன்றாக வாழ்வதுபோல் நடிப் பவர்களே. ஜோதிடம் ஒருபக்கம் இருக்கட்டும்; மனசாட்சி எப்படி பெற்றோருக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் துரோகம் செய்ய வைக்கிறது? விதியை மதியால் வெல்வதே ஜோதிடம்.
காதல் திருமணம்செய்து பத்து நாளில் விவாகரத்து செய்யலாமா என்று கேட்பவரையும் பார்க்கிறேன். சிலர் வயிற்றில் குழந்தையுடனும், சிலர் கையில் குழந்தையுடனும் விவாகரத்துக்கும் மறுமணத் திற்கும் ஓடிக்கொண்டிருக் கிறார்கள். மறுமணமும் விவா கரத்தும் நிம்மதியாக வாழ விடாது.
வயதுக்குவந்த பெண்ணை வைத்திருப்பவர்கள், தங்களின் தவறான நட்பால் வாழ்வைத் தொலைத்து, பிள்ளைகளின் வாழ் வையும் கேள்விக்குறியாக்கு கிறார்கள். இந்த விஷயங்கள் நாட்டிற்குப் புதிதில்லை. மக்கள் தொகையில் 20 விழுக்காடு அங்கு மிங்கும் மறைமுகமாக நடந்து கொண்டிருந்த இந்த செயல்கள் வெட்டவெளிச்சமாக ஐம்பது சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தனிநபரின் ஜனனகால ஜாத கத்தை இயக்கும் கோட்சார கிரகங்களே இதற்குக் காரணம்.
தற்போது கோட்சாரத்தில் காலபுருஷ 9-ஆம் வீடான தனுசில் சனி, கேது என்ற இரு கர்மவினை ஊக்கிகளும் 6-3-2019 அன்று ராகு- கேது பெயர்ச்சியில் இணை கிறார்கள். குரு வீட்டில் சனி, கேது இணைவு. நவம்பர் 2019-ல் குருவும் சனி, கேதுவுடன் இணைகிறார். சனி- கேது இணைவு சிறப் பித்துச் சொல்லும்படியான கிரக இணைவு களல்ல. பாலியல் வன்முறை, தவறான நட்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள், விவா கரத்து வழக்குகள் என கலாச்சாரத்தை இழிவுசெய்யும் சம்பவங்கள் அதிகரிக்கும்.
அண்மையில் சென்னையில் 75 வயது முதியவர் தனது 3-ஆவது திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க வந்திருந்தார். அதனால் பெற்றோர்களே, பிள்ளைகளின் நண்பர்களாக இருந்து குழந்தை களை நல்வழிப்படுத்துங்கள். பிள்ளைகளே, பெற்றோர்களின் ஆலோசனைகளைப் பின்பற் றுங்கள். ஒருவரின் ஜாதகத்தில் வரும் தோஷங்கள் அனைத்தும் நம்மைச் சார்ந்தவர்களின் கோபமும் சாபமுமே. எந்த தோஷமும் தானாக வருவ தில்லை. கோபத்தாலும் சாபத்தாலும் தோஷ மாக வரவழைக்கப்படுகிறது. பின்னாளில் அந்த தோஷத்தை சரிசெய்ய பரிகாரத்தை தேடியலைய வைக்கிறது. எனவே ஒருவரின் நடத்தை யாரையும் பாதிக்காதிருக்கப் பழகிக்கொள்வது என்றுமே நன்மை தரும்.
பரிகாரம்
பிள்ளைகளின் தவறான நட்பால் பிரச் சினைகளை சந்திக்கும் பெற்றோர்கள் வெள்ளிக் கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வேற்று மதத்தவருக்கு உணவுதானம் தண்ணீ ருடன் வழங்க வேண்டும். நாட்டு மருந்துக் கடையில் விற்கும் ஆகாச கருடக்கிழங்கை வாங்கி வீட்டின் முகப்பில் கட்டிவைக்க வேண்டும்.
செல்: 98652 20406